Monday, February 7, 2011



சமையல்:சிக்கன் தோசை


தோசைகளில் பலவிதம் உண்டு. அதிலும் சிக்கன் தோசைனா... கேட்கவா வேணும்..? இப்பவே எச்சில் ஊற ஆரம்பிக்குமே.. தோசை வார்க்கும் போதே இவ்வளவு அழகா இருந்தா.. சாப்பிட எப்படி இருக்கும்? டேஸ்ட்டும் சூப்பரோ சூப்பர்! செஞ்சுத்தான் பாருங்களேன்.....!

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 200 கிராம்
மைதா மாவு - 250 கிராம்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
இஞ்சி, பூண்டி விழுது - 2 டீ ஸ்பூன்
காரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* கோழிக்கறியை எலும்பில்லாமல் தேர்வு செய்து துவையல் பக்குவத்தில் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

* அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீ­ர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

* பின்பு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும்.

* மேல் பக்கத்திலும் சிறிது எண்ணெய் விட்டு, நன்றாக வெந்தபின்பு மறுபக்கம் திருப்பி போடவும்.

* இரண்டு பக்கமும் தோசை நன்றாக வெந்ததும் தோசைக் கல்லில் இருந்து எடுத்து விடவும்.

No comments:

Post a Comment