Monday, February 7, 2011


பெண்: ஏய் துஷ்யந்தா... ஏய் துஷ்யந்தா...
உன் சகுந்தலா... தேடி வந்தாள்...
ஏய் துஷ்யந்தா... நீ மறந்ததை...
உன் சகுந்தலா... மீண்டும் தந்தாள்...

ஆண்: கள்ள பெண்ணே என் கண்ணை சுத்தும் கண்ணே
என் கற்பை திருடும் முன்னே
நான் தப்பாய்விட்டு தப்பி வந்தேன்
மீண்டும் நீ நேரில் வந்து நின்றாய்
என் நெஞ்சைகொத்தித் தின்றாய்
எனக்கு உன்னை நினைவில்லையே

பெண்: பூங்காவில் மழை வந்ததும்
புதர் ஒன்று குடையானதும்
மழை வந்து நனைக்காமலே
மடிமட்டும் நனைந்ததே மறந்தது என்ன கதை
ஏய் துஷ்யந்தா... ஏய் துஷ்யந்தா...
உன் சகுந்தலா... தேடி வந்தாள்...

(இசை...)

பெண்: அழகான பூக்கள் பூக்கும் தேனாற்றங்கரையில்
அடையாளம் தெரியாத ஆலமர இருட்டில்
இருள்கூட அறியாத இன்பங்களின் முகத்தில்
இருபேரும் கைதானோம் முத்தங்களின் திருட்டில்
வருடித் தந்தாய் மனதை
திருடிக் கொண்டாய் வயதை
அது கிளையோடு வேர்களும் பூத்தக்கதை
ஆலாலங்காட்டுக்குள் ஒரு ஓட்டு வீட்டுக்குள்ளே
உன்னை போர்த்திக்கொண்டு படுத்தேன்
பாலாற்றில் நீராடும்போது துவட்ட துண்டு இல்லை
கூந்தல் கொண்டு உன்னை துடைத்தேன்

பெண்: அந்த நீலநதிக் கரையோரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பெண்: ஏய் துஷ்யந்தா... ஏய் துஷ்யந்தா...
உன் சகுந்தலா... தேடி வந்தாள்...

(இசை...)

பெண்: மான் ஆடும் மலைப்பக்கம் ஏரிக்கரை அருகில்
மயிலாடும் ஜன்னல் கொண்ட மாளிகையின் அறையில்
ஹா....
கண்ணாடி பார்த்துக்கொண்டே கலை யாவும் பயின்றோம்
கருநீல போர்வைக்குள்ளே இரு நாட்கள் இருந்தோம்
பகலில் எத்தனை கனவு
இரவில் எத்தனை நனவு
தூங்காத கண்ணுக்குள்ளே சுக நினைவு
சம்மதம் கேளாமல் என்னை சாய்த்து சாய்த்துக்கொண்டு
சட்டென்று சட்டென்று முத்தம் தந்தாய்
மாந்தோப்பில் மாந்தோப்பில் என்னை மடியில் போட்டுக்கொண்டு
புல்லில்லா தேகத்தை கொஞ்சம் மேய்ந்தாய்

பெண்: அந்த நீலநதிக் கரையோரம்
நீ நின்றிருந்தாய் அந்தி நேரம்
நான் பாடிவந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சில காலம்

பெண்: பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததேன் இந்த நெஞ்சமோ
ஏய் துஷ்யந்தா...
ஏய் துஷ்யந்தா...
ஏய் துஷ்யந்தா...
ஏய் துஷ்யந்தா...

No comments:

Post a Comment