Monday, April 25, 2011
BEN 10
பென் 10 என்பது "மேன் ஆஃப் ஆக்ஷன்" (டன்கன் ரூலே, ஜோ கேஸி, ஜோ கெல்லி மற்றும் ஸ்டீவென் டி. சீகல் ஆகியோர் அடங்கிய குழு) குழு உருவாக்கி கார்ட்டூன் நெட்வொர்க் ஸ்டூடியோஸ் தயாரித்த ஒரு அமெரிக்க அசைவூட்டத் (அனிமேஷன்) தொடராகும். அதன் துவக்கப் பகுதி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று கார்ட்டூன் நெட்வொர்க்கின் சனிக்கிழமை காலை நிகழ்ச்சித் தொடர்களின் முன்னோட்டத்தின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்டது. இரண்டாவது பகுதி கார்ட்டூன் நெட்வொர்க்கின் வெள்ளிக்கிழமைகளின் சிறப்பு நிகழ்ச்சியாக 2006 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று ஒளிபரப்பப்பட்டது. தொடர்ச்சியான இறுதிப் பகுதி 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சிக்கான கருப் பாடலை ஆண்டி ஸ்டர்மர் (Andy Sturmer) எழுதி மோக்ஸி (Moxy) என்பவர் பாடினார். 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில், பென் 10 ஐ அடுத்ததாகபென் 10: ஏலியன் ஃபோர்ஸ் வந்தது. பென் 10 தொடரின் அடுத்த தொகுதி பென் 10: எவல்யூஷன் எனத் தலைப்பிடப்பட்டது.
கதைக்கரு
பென் டென்னிசன் (Ben Tennyson), அவரது ஒன்று விட்ட சகோதரர் க்வென் (Gwen) மற்றும் அவர்களது தாத்தா மேக்ஸ்வெல் (Maxwell) ஆகியோர் அவர்களது கோடை முகாம் பயணத்தைத் துவங்குகின்றனர். அந்தப் பயணத்தில் தன்னுடன் க்வென் வருவதை விரும்பாத பென் காட்டில் ஒரு சண்டையில் க்வென்னுடன் கோவித்துக்கொண்டு தனியாகப் பிரிந்து செல்கிறான். அப்போது அவன் அயல் கிரகப் பொருள் ஒன்றினை நிலத்தில் கண்டெடுக்கிறான். அவன் அதை ஆராயும் போது, ஓம்னிடிரிக்ஸ் என அழைக்கப்படும் புதிரான கடிகாரம் போன்ற கருவியைக் காண்கிறான். அக்கருவி நிரந்தரமாக அவனது மணிக்கட்டில் ஒட்டிக்கொள்கிறது மேலும் அது அவனுக்கு பல்வேறு அயல் கிரகங்களில் வாழும் உருவங்களுக்கு மாறக்கூடிய திறனைக் கொடுக்கிறது, அந்த ஒவ்வொரு உருவத்திற்கும் தனித்தனி சக்திகள் இருந்தன. அவற்றில் சில உருவங்களில் இருக்கும் போது அவனால் மனிதரால் செய்ய முடியாத செய்கைகளைச் செய்ய முடிந்தது, அத்துடன் XLR8 போன்ற அதிவேகமும் ஃபோராம்ஸ் போன்ற வலிமையும் கிடைத்தது. அப்சக் எனும் பாத்திரம் வாந்தியெடுக்கும் செயலும் உண்டு. பென் ஒவ்வொரு முறையும் உருமாற்றங்களிலிருந்து மீளும்போதும் அவனிடமுள்ள இத்தகைய புதிய திறன்களைக் கொண்டு அடுத்தவர்க்கு உதவும் பொறுப்பு தனக்குண்டு என உணர்ந்தாலும் அவனையும் மீறி பிறருக்கு சில தொல்லை கொடுப்பதை அவனால் தடுக்க முடியவில்லை. க்வென் மற்றும் மாக்ஸ் ஆகியோருடன் சேர்ந்து பென் அயல் கிரகத்திலும் பூமியிலும் உள்ள தீய சக்திகளுடன் சண்டையிட்டு வெல்லும் சாகச காரியத்தில் இறங்குகிறான்.
ஓம்னிடிரிக்ஸ்
ஓம்னிடிரிக்ஸ் மர்மமான கடிகாரம் போன்ற அயல் கிரக கருவியாகும். அதை அணிந்திருப்பவர் பல்வேறு அயல் கிரக உருவங்களுக்கு மாறும் திறனைப் பெறுவார். அது தேர்ந்தெடுக்கப்பட்ட அயல் கிரக உயிரியின் டி.என்.ஏ வுடன் அவரது டி.என்.ஏ ஐ ஒருங்கிணைப்பதன் மூலம் அவரை அந்த உயிரியாக மாற்றுகிறது. அயல் கிரக உருவக் கட்டுப்பாட்டு முகப்பைத் திறந்து, அதனை ஓம்னிடிரிக்ஸின் காட்சிப்பலகத்தில் காண்பிக்கப்படும் அயல் கிரக உயிரிகளில் விரும்பிய ஒன்றை நோக்கி அதனைத் திருப்பிவிட்டு பின்னர் கட்டுப்பாட்டு முகப்பை மீண்டும் மூடி அழுத்தும் போது உருமாற்றச் செயல் முழுமையடையும். அயல் கிரக உயிரியின் டி.என்.ஏவிலும் உண்மையான அயல் கிரக உரியிரியின் பண்புக்கான சில அம்சங்கள் இருக்கலாம்; எப்படி அயல் கிரக உயிரி என உணர்தீர்கள் எனக் கேட்டபோது, பென் பின் வருமாறு விவரிக்கிறான்: " ' அது முதலில் விசித்திரமான வகையில் என்னைக் நிலைகுலையச் செய்தது. நான் நானாகவும் இருந்தேன்... வேறொருவன் போலவும் இருந்தேன்.
ஓம்னிடிரிக்ஸ் பிரபஞ்சத்தின் மக்கள் "மற்றவர்களின் உருவத்தில் சஞ்சரிக்க உதவுவதற்காக" அஸ்மூத்தால் (கால்வனைப் போன்ற சாம்பல்நிறப்பொருள்) உருவாக்கப்பட்டது. இருப்பினும், பலர் ஓம்னிடிரிக்ஸ்சின் திறன்களை ஒரு சக்தி மிகுந்த ஆயுதமாக பயன்படுத்தகூடியதாகக் கண்டனர்- குறிப்பாக வில்லன் வில்காக்ஸ் விண்மீண் மண்டலத்திலேயே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதம் எனக் கூறுகிறான். இதன் காரணமாக மக்கள் ஓம்னிடிரிக்ஸை தவறுதலாக பயன்படுத்தக் கூடும் எனும் அச்சத்தால், ஓம்னிடிரிக்ஸை பயன்படுத்துபவர்கள் எவராக இருப்பினும் அதன் சக்திகளை முழுமையாக அணுக முடியாதவாறு அஸ்மூத் அதை உருவாக்கிவைத்தார். இத்தகைய பாதுகாப்பு அம்சங்களில் கட்டுப்பாட்டு முகப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டதல்லாத வேறொரு அயல் கிரக உயிரியாக மாற மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்னும் கட்டுப்பாடு, பத்து நிமிட தானியங்கி கால-முடிவு அளவு, பத்து அயல் கிரக உயிரிகளின் உருவத்திற்கு மட்டுமே மாற முடியும் என்ற கட்டுப்பாடு மற்றும் தானே-அழிந்துவிடும் அம்சம் ஆகியன உள்ளடங்கியுள்ளன. இருப்பினும், ஓம்னிடிரிக்ஸ்சின் முதன்மைக் கட்டுப்பாடு திறக்கப்பட்டுவிட்டால் இந்த பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் செயலிழந்துவிடும். கட்டுப்பாட்டு முகப்பில் ஏதோ ஒரு வித சேர்க்கையில் தேர்ந்தெடுக்கும்போதே இவ்வாறு முதன்மைக் கட்டுப்பாடு திறக்கும். முதன்மைக் கட்டுப்பாட்டை ஒருவர் திறந்துவிட்டால் அதை அணிந்திருப்பவர் வரம்பற்ற காலத்திற்கு தான் விரும்பும் அயல் கிரக உயிரி உருவத்தில் இருக்க முடியும். அது மட்டுமின்றி வெறுமென நினைப்பதன் மூலம், பயனர் குறிப்பிட்ட அயல் கிரக உயிருக்கு வழங்கும் பெயரைக் கூறுவதன் மூலம் அல்லது ஓம்னிட்ரிக்ஸ் சின்னத்தைத் திருப்புவதன் மூலம் தாம் விரும்பும் அயல்கிரக உயிரியின் உருவத்திற்கு மாறவும் முடியும்.
ஓம்னிட்ரிக்சில் அஸ்முத் உருக்வாக்கிய முன்பே நிரலாக்கம் செய்யப்பட்ட டி.என்.ஏ உருவாக்கியில் (சீக்வென்சர்) உள்ள அயல் கிரக உயிரிகளாக மாற முடிவது மட்டுமின்றி அதனால் பிற அயல் கிரக உயிரிகளைத் தொடுவதன் மூலமாகவே அவற்றிலிருந்து டி.என்.ஏ மாதிரியைக் கிரகித்துக்கொள்ளவும் முடியும். இவ்வாறு செய்யும்போது பிற உயிரியிலிருந்து டி.என்.ஏ மாதிரி ஒன்று பதிவிறக்கம் செய்யப்பட்டு பின்னர் அதை அணுகும் வசதி கிடைக்கிறது.
தொலைக்காட்சிப் படங்கள்
2007 மற்றும் 2008 ஆண்டு காலத்தில் இரண்டு பென் 10 படங்கள் வெவ்வேறு காலத்தில் வெளியாயின. முதல் படம் வழமையான அசைவூட்டப் படமாகும், அது சீக்ரட் ஆஃப் தி ஓம்னிட்ரிக்ஸ் என்றழைக்கப்பட்டது. அதில் தற்செயலாக ஓம்னிட்ரிக்ஸ் தானாக அழியும் தெரிவு செயல்பட்டுவிடும். அதனால் அதை நிறுத்துவதற்காக பென் அதை உருவாக்கியவரைத் தேடிச் செல்வான். படத்தின் முன்னோட்டம் பில்லி & மேண்டி: ராத் ஆஃப் த ஸ்பைடர் குயின் (Billy & Mandy: Wrath of the Spider Queen) திரைப்படத்துடன் வெளியிடப்பட்டது. அது 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 10 அன்று ஒளிபரப்பப்பட்டது. மைக்கேல் குவேலீன் அப்படத்தில் வில்லனாக நடித்த வில்காக்ஸ்சை, "டார்த் வேடர் போன்று நகைச்சுவை உணர்வற்றவர்" என விமர்சித்தார். சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஓம்னிட்ரிக்ஸ் படத்தின் வேறு பதிப்பில் ஒரு வித்தியாசமான அயல்கிரக உயிரி (ஐ கை) இடம்பெற்றது. அது முதலில் வெளியான பதிப்பில் (ஹெட்பிளாஸ்ட்) இடம்பெற்ற அயல்கிரக உயிரியிலிருந்து வேறுபட்டிருந்தது. அந்த வித்தியாசமான பதிப்பு 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒளிபரப்பானது. மூன்றாவது பதிப்பு (XLR8 இடம்பெற்ற பதிப்பு) 2007 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று ஒளிபரப்பானது. ஏலியன் ஃபோர்ஸ் திரைப்படத்தின் முதல் திரையிடலின் போது சீக்ரெட் ஆஃப் தி ஓம்னிட்ரிக்ஸ் பென் 10 இன் இறுதி விழா அம்சமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அது கடைசி பகுதிக்கு வெகு நாளைக்கு முன்பாக ஒளிபரப்பப்பட்டது.
இரண்டாவது லைவ் ஆக்ஷன் வகை படம் பென் 10: ரேஸ் அகெயின்ஸ்ட் டைம் (Ben 10: Race Against Time) ஆகும். அது 2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று ஒளிபரப்பானது. கதையானது ஊகிக்கத்தக்கவகையில் குட் பை அண்ட் குட் ரிட்டன்ஸ் முன்பாக நடைபெறுகிறது. அது பென், க்வென் மற்றும் தாத்தா மாக்ஸ் ஆகியோர் தங்கள் சொந்த ஊரான பெல்வூட்டிற்கு திரும்ப வந்து மீண்டும் "இயல்புடன் இருக்க" முயற்சிப்பதைப் பற்றியதாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, அவர்களது வாழ்வில் மீண்டும் ஈயோன் எனப்படும் ஒரு மர்மமான அயல் கிரக உயிரியால் தொல்லைக்குள்ளாகிறது. எதிர்பாராதவகையில் அதற்கு ஓம்னிட்ரிக்சுடன் தொடர்பு இருந்தது. அது 2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று கார்ட்டூன் நெட்வொர்க்கில் முதல் திரையிடலாக ஒளிபரப்பானது. அப்படம் அலெக்ஸ் விண்டரால் இயக்கப்பட்டது. விண்டர் 2007 ஆம் ஆண்டில் வெளிப்படையான அறிமுகத்தில் "இப்படம் கார்ட்டூனைப் போல அன்றி சினிமாவைப் போலவே இருக்கும் சாகச இதிகாசமான X-மென் போல் இருக்க வேண்டும்" எனவும் எல்லா வயதினருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். படத்தின் தயாரிப்பு அக்டோபரில் முடிவடைந்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று முதல் திரையிடல் நிகழ்ச்சி இடம்பெற்றது. ரேஸ் அகைன்ஸ்ட் டைம் படத்தை அடுத்த படமான Ben 10: Alien Swarm 2009 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று முதல் திரையிடப்பட்டது. இடம்பெற்ற பென் 10 ரேஸ் அகைன்ஸ்ட் டைமில் இருந்த அனைத்துப் பாத்திரங்களும் இதிலும் இடம்பெற்றன.
தொடர் வரிசை
பென் 10: ஏலியன் ஃபோர்ஸ் படமானது முதல் தொடர் முடிந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக வெளியிடப்பட்டதாகும். இதன் மறைமுகமான விளைவாக, இந்தத் தொடர் அதற்கு முன்வந்தவற்றைப் போல ஒளிரவில்லை. இந்தத் தொடர் கார்ட்டூன் நெட்வொர்க்கில் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று முதலில் திரையிடப்பட்டது. அப்போது கனடாவில் டெலிடூனில் முதல் திரையிடல் இடம்பெற்றது. என்ற ஒரு வீடியோ விளையாட்டு நிண்டெண்டோ டி எஸ், விய், ப்ளேஸ்டேஷன் 2 மற்றும் ப்ளேஸ்டேஷன் போர்ட்டபள் ஆகியவற்றில் வெளியாகியது.
மற்றொரு பின் தொடர் நிகழ்ச்சித் தொடரான பென் 10: எவல்யூஷன் (Ben 10: Evolution), கார்ட்டூன் நெட்வொர்க் அப்-ஃப்ரண்ட் 2009 வெளியீட்டில் உறுதிப்படுத்தப்பட்டது. அது ஏலியன் ஃபோர்ஸ் தொடரின் ஆண்டுக்கு அடுத்த ஆண்டில் இடம்பெறுவதாக இருந்தது.
"உங்க டாக்டர் பயங்கர பிடிவாதக்காரர்னு சொல்றாங்களே...?" "ஆமாம்! கத்தியை எடுத்தா, கிட்னியை பார்க்காம விடமாட்டார்....!"
உங்க மனைவி வந்ததும் மாத்திரை சாப்பிடுறீங்களே...ஏன்? தலைவலி வந்தா மாத்திரை சாப்பிடணும்னு டாக்டர் சொல்லியிருக்காரே...!
காதலி: எல்லா நாளும் கரெக்டா வர்ற. வீக் எண்ட் ஆனா மட்டும் என்னை பார்க்க ஏன் வர மாட்ற...? காதலன்: நம் உறவில் எண்ட்டே இருக்க கூடாதுல அதுக்குத்தான்.
"என் பையன் மாடு மேய்க்கக் கூட லாயக்கு இல்லை." "அப்புறம்?" "அரசியல்லே சேரச் சொல்லிட்டேன்."
"நான் திருடிக்கிட்டு வந்த காரை போலீஸ்காரங்க பிடிச்சிட்டாங்க." "அப்புறம் என்னாச்சு?" "தள்ள முடியாம விட்டுட்டுப் போயிட்டாங்க!"
Wednesday, April 20, 2011
சந்திரபாபுவுக்கு ஏன் எம்.ஜி.ஆரை பிடிக்காது?
---
குலேபகாவலி ஷூட்டிங்கில் சந்திரபாபு, பட குழுவினருடன் சேர்ந்து ஜோக் அடித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அவர் அடித்த ஜோக்கிற்கு எல்லோரும் சிரித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரை தவிர.
“உங்க ஜோக்குக்கு கிச்சு கிச்சு மூட்டினாத்தான் சிரிப்பு வரும்”
இதற்கு அவமானமாக உணர்ந்த சந்திரபாபு, மற்றவர்களுடன் விசாரித்ததில் தெரிந்துக்கொண்டது. அவர் எப்போதும், எதிலும் தான் மட்டுமே பிரபலமாகத் தெரிய வேண்டும் என்று நினைப்பார். கூட்டத்தோடு சேர மாட்டார். தனிமையில்தான் அமர்ந்திருப்பார். அவருடன் பேச வேண்டுமானால் அவர் இருக்கும் இடம் தேடித்தான் போக வேண்டும்.
அதை பற்றி சந்திரபாபு சொன்னது,
“அன்று அவர் வளர்த்துக்கொண்ட அந்த ‘தான்’ என்ற அகந்தை, இன்று அவர் வளர்ந்ததைப் போலவே வளர்ந்திருப்பதை நான் கண்கூடாகக் காண்கிறேன். அந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு நான் அவரை விட்டு ஒதுங்கியே இருப்பேன்.”
---
குலேபகாவலி, புதுமைப்பித்தன் வெற்றிகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் படங்களில் காமெடிக்கு சந்திரபாபுதான் வேண்டும் என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘சந்திரபாபுவின் காமெடிக்காகவே படத்தை பார்க்கலாம்’ போன்ற பேச்சுக்கள் எம்.ஜி.ஆரின் காதுக்களுக்கு சென்றது.
அதில் இருந்து, “சந்திரபாபு வேண்டாம். அவன் இருந்தால், நான் கால்ஷீட் தரமாட்டேன்” என்று எம்.ஜி.ஆர். கூறியதாக வந்த செய்திகள் சந்திரபாபுவுக்கு தெரிய வந்தது.
ஆனால், அதற்கு பிறகும் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். சந்திரபாபுவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
---
அடிமைப்பெண் ஷூட்டிங்.
சந்திரபாபுவும், ஜெயலலிதாவும் ஒரு சுவர் ஏறி குதிப்பதுப்போல் காட்சி. முதலில் ஏறிய சந்திரபாபு, நிலைத்தடுமாறி கீழே விழப்போக, ஜெயலலிதா பிடித்துக்கொண்டார்.
சாப்பாட்டு நேரத்தில் அனைவருக்கும் உணவு வந்துவிட, சந்திரபாபுவுக்கு மட்டும் வரவில்லை. எம்.ஜி.ஆர். தன்னுடைய சாப்பாட்டை, சந்திரபாபுவுக்கு கொடுத்துவிட்டு, சாப்பிடாமல் இருந்துவிட்டார். கேட்டதற்கு, பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஏன் இப்படி உம்மென்று இருக்கிறார் என்று ஜெயலலிதாவிடம் சந்திரபாபு கேட்டதற்கு, ஜெயலலிதா சந்திரபாபுவை விழாமல் தாங்கி பிடித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்று சொன்னாராம்.
இதை கேட்டவுடன் சந்திரபாபுவுக்கு சங்கடமாகிவிட்டதாம். ஏனெனில் சந்திரபாபுவிற்கும், ஜெயலலிதாவின் குடும்பத்திற்கும் ஏற்கனவே நல்ல பழக்கம் உண்டு. ஜெயலலிதா சிறுமியாக இருக்கும்போதே, அவர்கள் வீட்டுக்கு சந்திரபாபு செல்வாராம். ஜெயலலிதாவும் ‘அங்கிள்’ என்று ஓடி வந்து பழகுவாராம்.
---
சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து ‘மாடி வீட்டு ஏழை’ என்றொரு படத்தை ஆரம்பித்தார். இந்த படத்தில் நடிக்க சம்மதித்த எம்.ஜி.ஆர், சம்பளத்தின் ஒரு பகுதியை கருப்பாகவும், மீதியை வெள்ளையாகவும் கேட்டதாக சந்திரபாபு, பின்னர் பிலிமாலயா பத்திரிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அட்வான்ஸ் வாங்கிய எம்.ஜி.ஆர்., பூஜைக்கும் அடுத்த நாள் ஷூட்டிங்கிற்கும் மட்டுமே வந்திருக்கிறார். பிறகு, எம்.ஜி.ஆரின் கால்ஷீட் கிடைக்கவே இல்லை.
நேரே சென்று பேசி பார்க்கலாம் என சென்ற சந்திரபாபுவை, அரை மணி நேரம் கண்ணேதிரே காக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். ’நான் நடிகன், நான் கதாசிரியன், நான் வசனகர்த்தா, நான் டைரக்டர் என பெருமைப்பட்ட என்னை, டேய் நீ புரொடக்ஷன் பாயும் கூடத்தான்’ என அப்போது உணர வைத்ததாக கூறியிருக்கிறார் சந்திரபாபு.
கடைசியில் அவரை பார்த்தபோது, கால்ஷீட் பற்றி கேட்டிருக்கிறார். கால்ஷீட் சம்பந்தமாக அண்ணனிடம் பேசிக்கொள்ளும்மாறு எம்.ஜி.ஆர் சொல்ல, அண்ணன் சக்ரபாணியை பார்க்க சென்றார் சந்திரபாபு.
அங்கே அவர்களுக்குள் நடந்த உரையாடல், ஒருகட்டத்தில் முற்றிப்போய், சேரைத்தூக்கி அடிக்கும் நிலைக்கு போய்விட்டார் சந்திரபாபு. இந்த விஷயம் வெளியே பரவி, படம் நின்று போய், அடமானம் வைத்திருந்த சந்திரபாபுவின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்தது. பெயரும் கெட்டுப்போனது. குடி இன்னும் அதிகமாக, குடி கெட்டது.
---
ஒரு பேட்டியில் சந்திரபாபுவிடம் இப்படி கேட்டார்கள்.
எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.
Friday, April 1, 2011
நட்பை நாம் நேசிக்கும்போது...!
"எத்தனையோ கவிதகைள்
என்னால் எழுதப்பட்டிருக்கின்றன...!
நண்பா,
உனக்கொரு கவிதை நான்
உருவாக்கும்போதுதான் அது
ஒளிவிட்டு பிரகாசிக்கின்றது....!
எத்தனையோ முகங்கள்,
எவ்வளவோ மொழிகள்,
எல்லாம் ஒன்றிணைகின்றன
நட்பை நாம் நேசிக்கும்போது...!
எத்தனையோ துன்பங்கள்,
எவ்வளவோ கஷ்டங்கள்,
எல்லாம் மறைகின்றன
நட்பை நாம் யாசிக்கும்போது...!
தூய்மையான உள்ளத்தில்
தோன்றுகின்ற நட்பெல்லாம்
துதிக்கப்படுகின்றன...!
என்றும்,
உன்னதமாய் மதிக்கப்படுகின்றன...!
எங்கேயோ நீயும்....
இங்கே நானும்....
இணைந்தது எப்படியோ..?
காதலா இல்லை?
கள்ளமற்ற நட்புதான்...!
இதை கடைசிவரை நான்
காப்பாற்றுவேன் என்று கூறி,
உனது நட்பை வாழ்த்தி
வணங்குகிறேன்
Tuesday, March 29, 2011
என் விதியின் பாதையில்
அன்பே உன்னை சந்தித்தேன்
என்னை சிந்தித்தேன்..
உன் பார்வை சீண்டிட
என் மனம் தடுமாறிட..
கனவுகள் எனக்குள்
கருக்கொண்டது..
கருவுற்ற கனவுகளும்
வளர்ந்திட தோன்றிய
கனவு நிஜமாகியது...
காலங்கள் கரைந்தது
விதி தேவன் விளையாட
நம் வாழ்வு திசை மாறிட
வாழ்வெனும் பாதையே
வெறுமையாய் ஆனது
நீ அங்கே தனிமையிலே
நான் இங்கே தனிமையிலே
சந்திப்பே இல்லாத
சந்தர்ப்பம் சூழ்ந்திட
காலங்கள் காற்றுபோல்
வேகமாய் சுழன்றது
உன் வாழ்வு
திசை மாறிடவும் ஆனதடி
உன் உறவுகளின் அதட்டலால்
மனதை நீ கல்லாக்கினாய்
என நானறிவேனடி
உறவுகளுக்காய்
உன்னை நீ மறந்தாய்
புதியவளாய் புது உறவில்
இணைந்திட்டாயடி...
கனவுகள் கரையேறுமென
காத்திருந்தேன்
கனவினை களைந்து
என் ஆசைகளை
கானல் நீராக்கியது விதி
உன் நினைவுகளை
எனக்குள் சிறைவைத்து
என் சுவாசமே நீயென
வாழ்கிறேன் நானடி...!
உன் பிழை ஏதடி
இறைவன் அவன்
திருவிளையாடலடி...
குருதி தோய்ந்த எம் இனம்
பார்க்க முடியவில்லை
பாவம் இந்த பாரினிலே - எம்
தமிழினம் படும்பாட்டை
தம்மினம் தரணியிலே
தலைநிமிர்ந்து வாழ்வதற்காய்
தினம் தினம் எத்தனை உயிர்கள் - அங்கே
தம்முயிர் நீர்த்தனர்
அவர் தம் உயிர் தியாகத்தோடு
உறங்கி போயினவா?
தமிழினத்தின் உணர்வுகளும் உரிமைகளும்.
சொல்ல வார்த்தையில்லை
சொந்த நாட்டையே சொர்க்கபூமியாக
செழிக்க வைக்க முயன்ற - எம்
இனம் முண்டங்களாகவும்
முட்கம்பிகளுக்கிடையிலும்
முகவரிகளை இழந்தும்
மூச்சு விடகூட திக்குமுக்காடும்
சோக கதை இதனை...
அபிவிருத்தி என்ற பெயரில்
இன விருத்தி கூட அங்கே
இலவசமாக நடக்கின்றது
பாதுகாப்பு என்ற பேரில்
படையெடுத்து வந்தவர்கள்
பதுங்கியிருந்தே - எம்
உறவுகளின் உயிரை அங்கே
பலியெடுக்கும் பரிதாமம் என்ன?
பணத்திற்கு ஆசைகொண்டு
பகல் கனவை நிஐமாய் கொண்டு
பஞ்சமற்ற வாழ்க்கை இதுவென்று - எம்
பண்பாட்டை மாற்றும் கூட்டம்
படர்ந்து பெருகுதிங்கே..
கல்தோன்ற காலத்தில்
முன் தோன்றி முத்தமிழ் வளர்த்திட்ட
மூத்த குடி இன்று
மூர்ச்சையற்று முடிங்கி போகுது
எம் இனத்தின் நிலை கண்டு...
My life
பாலுமின்றி பாலகர்கள் பசியில் துடிக்க சுதந்திரம்...
வேண்டுமென்று உயிர்கொடுக்க ஒருபுலத்துத் தமிழர்கள்...
பாலையூற்றி சூடம்காட்டி ஓடவேண்டும் எந்திரன்.
இல்லையென்றால் உயிர்துறக்க இன்னும் சில தமிழர்கள்
புலம் பெயர்ந்தும் குலம் மறவா மொழிகலவா தமிழ் பேசி..
தமிழ் இனத்தின் தனித்துவத்தை மகத்துவமாய் சிலர் பேண...
புலத்திலுள்ளோர் அயல்மொழியை இடைசெருகித் தம்பெருமை...
அனுதினமும் உயர்ந்திடவே பெரும்தவத்தை செய்கின்றார்..
அடிக்கு மேல் அடி வாங்கி அடி மேல் அடியெடுத்து.
அடி பிசகா இலட்சியத்தின் பாதை வென்றோர் ஒருபுறம்..
அடிமையாய் எருமையாய் வெறுமையாய் அடிவருடி.....
மடியேந்தி கோடி சேர்த்து வயிறு வளர்ப்போர் மறுபுறம்
எக்களிப்பார் கொக்கரிப்பார் கொதித்தெழுந்தால் சவுக்கடிப்பார்..
போராட்டம் போதுமென்று.. தமைத் தாமே காத்துக் கொள்வார்..
தமிழன் என்ற போர்வையிலே அவர்க்கெதிராய் சில ஈழவர்.....
தீக்குளித்தார் தமை அழித்தார்.. போராட்டம் வேகம் பெற
அச்சாரமாய் தமை அளித்தார்.. அண்டை நாட்டில் வாழ்ந்தாலும்
ஆழ நினைத்துப் பார்க்கையிலே ஈழத்தவரிலும் மேலவர்
நாற்று நட்டு களை பறித்து நாற்றங்களைப் புறக்கணித்து
வெட்டைவெளிப் பொட்டல்களில் கட்டுடம்பைக் காயவிட்டு
நாட்டு மக்கள் நலம் செழிக்க தனையுருக்கும் தொழிலாளி....
வேற்று நாட்டு காசு பார்க்க மாற்றான் தோட்ட மலர்கள் விற்று...
வீட்டு மக்கள் செல்வம் காண மற்றவரை வாட்டிக் கொன்று
சிதை வரையில் வதை வதைக்கும் இரக்கமற்ற முதலாளி...
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உன்னைப்பாட உவமை தேடினேன்
அடடா உனக்குத்தான் ஒப்பீடு பிடிக்காதே
கண்ணைமூடிக் கவிதை பாடிநேன்
அடடா உனக்கென்னைக்
கவிஞ்ஞனாய்ப் பிடிக்காதே
பெண்ணெண்று தமிழ்ப்
பெருமைகள் சூடினேன்
மண்ணாங்கட்டித் தமிழ்
மரபொன்றும் பிடிக்காதே
என்னென்றுசொல்லி என்
ஏக்கத்தைத தீர்ப்பேன்
பெண்ணெண்று பிறந்தது
உனக்கே பிடிக்காதே
விண்வெண்று வாழவே உன்விரல்தெட்டேன்
அடடா உனக்குத்தான் முன்னீன்று
தாங்கிடும் முயற்சிகள் பிடிக்காதே
கஸ்டத்தை தாங்கியுன்
இஸ்டத்தை வாங்கினேன்
அடடா உனக்குத்தான் கஸ்டப்பட்டுவாழ
கடுகளவும் பிடிக்காதே
பெற்றாளே ஒருத்தியெனை பெறவில்லை
ஏதும்சுகம் முற்றாயும் கொடுத்தும் முடியவில்லையே
அடடா உனக்குத்தான்
உனக்காய்நான் செத்தாலும் பிடிக்காதே...
Monday, March 28, 2011
Friday, March 11, 2011
சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!
உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், "பழங்கதை பேசுவதால் என்ன பயன்?" என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.
கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.
இந்த அடிப்படையில்தான் சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு குறித்த இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.
டார்வின் வடித்த பரிணாமக் கோட்பாட்டில் "விடுபட்ட இணைப்பு" என்ற ஒரு குறை நீண்ட காலமாக நிலவியது. மனிதக் குரங்கு மனிதனாக மாறிய நிலையை அவரால் சான்று காட்டி நிறுவ முடியாமல் போனது. அதாவது, அவ்வாறான இரட்டை நிலையில் (குரங்கின் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்த நிலை) உள்ள விலங்கின் படிமம் எதையும் அவரால் கண்டறிய இயலவில்லை. இந்த விடுபட்ட இணைப்பு, டார்வின் மரணத்திற்குப் பிறகும் புதிராகவும் சவாலாகவும் நீடித்தது. கடந்த 2002 ஆம் ஆண்டு, எத்தியோப்பியாவில் அந்த விடுபட்ட இணைப்பிற்குத் தொடர்பு கிடைத்துவிட்டது. டார்வினுக்குக் கிடைக்காத அந்த இரட்டை நிலை விலங்கின் படிமங்கள் எத்தியோப்பியாவில் கண்டறியப்பட்டன. டைம் இதழ் இது குறித்த விரிவான கட்டுரையை அப்போது வெளியிட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன.
"சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்" என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை "இந்து மதத்தோடு" தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.
கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
"இருங்கோவேளே... என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
யாரும் நெருங்க அச்சப்படும் வீரனே! புலியைக் கொன்றவனே (புலிகடிமாலே)! இந்த மகளிரை ஏற்றுக் கொள்வாயாக!"
- இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
"நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்ற வரியில் தொடங்குகிறது.
"வடபால் முனிவன்" யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது "பெரும் மண் பாண்டத்தில் தோன்றி" என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, 'ஓமகுண்டத்தில்' என்று தவறாகப் பொருள் கூறினர். 'தட' என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் 'தட' என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.
கண்ணன் தமிழன்
நச்சினார்க்கினியரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.
அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், "வடபால் முனிவர் தடவினுள் தோன்றி" என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை 'தாச யாதவன்' என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!
கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.
"கண்ணன் கருப்பு நிறத்தவன் தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தத் ஆரியர் தலைவன் இந்திரன்" ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.
அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு).
அகத்தியரோடு தொடர்புடைய 'தட' குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.
அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.
மீண்டும் கண்ணனிடம் வருவோம். நச்சினார்க்கினியார் குறிப்பில் வரும் வேளிரை கண்ணன் ஏன் தென்னாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கேள்வி இயல்பானது. மேலும், அவ்வாறு அனுப்பப்பட்ட வேளிர் குலத்தவர் எருமை நாட்டில் ஆட்சி செய்யும்போது, அங்கும் ஒரு நகரத்துக்கு துவரை என ஏன் பெயரிட வேண்டும் என்ற கேள்வியும் தவிர்க்க இயலாதது.
ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, "நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.
இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.
அழிந்த நகரங்கள்
இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான். இதனால் கோபம் கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்
"உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு" என்கிறார் கபிலர். (புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு. கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)
இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் "நீடுநிலை அரையத்துக் கேடு" என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.
மேலும், கபிலர் பாடலில் உள்ள நகரங்கள் வடக்கே இருந்தவைதான் என்ற கருத்தில் நிற்கின்றன. ஆகவே, வேளிர் குலத்தவரின் முன்னோர் சிந்துவெளியில் அரசாண்டவர்கள் என்பதும், அவர்களது நகரங்கள் அழிக்கப்பட்டன என்பதும் தெளிவாகிறது.
வேளிர் என்பது, வேளாளர் என்பதன் முந்தைய சொல். வேளிர் குலத்தவர், வேளாண் குடியினர் ஆவர். வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்€ல் அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.
சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, 'தாச யாதவன்' என்கின்றன.
கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் "துவரை" என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.
தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் "அகத்தியம்" என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். "அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்" என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.
பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.
சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.
முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, "இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்" என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
புதுவைக் கவியான பாரதிதாசன் புதுமைக் கவியும் ஆவார். தமிழ், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கியவர். புதுவை அரசியலார் கல்லூரியில் தமிழாசிரியராப் பணியாற்றியவர். புரட்சிக் கனல் தெறிக்கும் இவர் பாடல்கள், தமிழர் வாழ்வில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளைக் கண்டிப்பன. குடும்ப விளக்கு, குறிஞ்சித்திட்டு, பாண்டியன் பரிசு முதலான பல கவிதை நூல்களை இவர் படைத்துள்ளார்.
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார். இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார். இசையுணர்வும் நல்லெண்ணமும் அவருடைய உள்ளத்தில் கவிதையுருவில் காட்சி அளிக்கத் தலைப்பட்டன. சிறு வயதிலேயே சிறுசிறு பாடல்ளை அழகாகச் சுவையுடன் எழுதித் தமது தோழர்கட்குப் பாடிக் காட்டுவார்.
நண்பர் ஒருவரின் திருமணத்தில் விருத்துக்குப் பின் பாரதியாரின் நாட்டுப் பாடலைப் பாடினார். பாரதியாரும் அவ்விருத்துக்கு வந்திருந்தார். ஆனால் கவிஞருக்கு அது தெரியாது. அப் பாடலே அவரை பாரதியாருக்கு அறிமுகம் செய்து வைத்தது. தன் நண்பர்கள் முன்னால் பாடு என்று கூற எமது கவிஞர் "எங்கெங்குக் காணினும் சக்தியடா" என்று ஆரம்பித்து இரண்டு பாடலை பாடினார். இவரின் முதற் பாடல் பாரதியாராலேயே சிறீ சுப்பிரமணிய கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என்றெழுதப்பட்டு சுதேச மித்திரன் இதழுக்கு அனுப்பப்பட்டது.
புதுவையிலிருந்து வெளியான தமிழ் ஏடுகளில் "கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், பாரதிதாசன் என பல புனை பெயர்களில் எழுதி வந்தார். பிரபல எழுத்தாளரும் திரைப்படக் கதாசிரியரும் பெரும் கவிஞருமான பாரதிதாசன் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமனற்ற உறுப்பினராக 1954 ஆம் ஆண்டு தேர்நதெடுக்கப்பட்டார்.
1946 ஜூலை 29 இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25000 பொற்காசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாதமியின் விருது கிடைத்தது. இவருடைய படைப்புக்கள் தமிழ்நாடு அரசினரால் 1990 இல் பொது உடமையாக்கப்பட்டது.
கவிஞர் 21.4.64ல் இயற்கை எய்தினார். மலர்மன்னன் என்ற மகனும் மூன்று பெண்குழந்தைகளும் உள்ளனர்.
வலியோர்சிலர் எளியோர்தமை
வதையேபுரி குவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாமெனும் நினைவா?
உலகாளஉ னது தாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்!
உதவாதினி ஒரு தாமதம்
உடனேவிழி தமிழா!
- பாரதிதாசன்